தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளுக்கான மொத்த விலை கவனத்திற்கொள்ள வேண்டிய விதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்கலாம்.
கடந்த காலங்களில் நிலவிய அதிகரித்த உச்ச விலையில் காணப்பட்ட காய்கறிகள், பொதுவாக முருங்கைக்காய், கரட் மற்றும் கறிமிளகாய், கோவா, போஞ்சி மற்றும் ஏனைய மரக்கறிகள் கிலோவொன்றிற்கான மொத்த விலை 300 ரூபாவையும் விடக் குறைவான விலையில் அவதானிக்கலாம்.
முருங்கைக்காய் கிலோவொன்று 900 தொடக்கம் 1000 ரூபா வரையிலும், கரட் 320 ரூபாவிற்கும், கறிமிளகாய் 400ரூபவாகவும், போஞ்சி 280 முதல் 300 வரையிலும், கோவா 350 ரூபா விலையிலும் மதிப்பிடப்பட்டாலும், அதிகமான மரக்கறி வகைகளின் விலைகள் குறைந்துள்ளமையை அவதானிக்கலாம்.
விசேடமாக பச்சை மிளகாய் விலை 300 ரூபா வரையிலும் குறைந்துள்ளமை விசேட அம்சமாகும். பீக்கங்காய் 70 அல்லது 80 ரூபாவாகவும், வெள்ளரிக்காய் மற்றும் முள்ளங்கி என்பன 30 இலிருந்து 50 வரையிலும், கத்தரிக்காய் 160 ரூபா வரையிலும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வருடத்தின் சில காலப்பகுதியில் வட்டக்காயை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்னும் 200 ரூபா விலையில் விற்பனை செய்வதனால் சந்தைப்படுத்துவதற்கு முடியாத நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.