கிளிநொச்சியில் இயந்திரம் மூலம் நாற்று நடுகை பயிற்சி செயன்முறை பரந்தன் பன்னங்கண்டி பகுதியில் இன்று(14) நடைபெற்றது.
கிளிநொச்சி பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி கமக்கார அமைப்புகள், கமநல சேவை திணைக்களத்தினர் விவசாய போதனாசிரியர்கள், நெற்செய்கையாளர்கள் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.