கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வருமானம் குறைந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு Muslim AID நிறுவனத்தின் அனுசரணையுடன் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி தலைமையில் இன்று (13) வழங்கி வைக்கப்பட்டது.
உப்பாறு, கச்சகொடித்தீவு, மகருகிராமம் சூரங்கல், மணியரசன் குளம், ஆயில்யடி,மாஞ்சோலைச்சேனை, அண்ணல் நகர்,ஏகுதார் நகர், பைசல்நகர், இடிமன்,குட்டி கராச்சி, பெரிய கிண்ணியா போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.