அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (13.03.2024) மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.சஞ்சீவ விமலகுணரட்ன, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதில், 2024 ஆம் ஆண்டில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.