யாழ்ப்பாண மாவட்ட கோப்பாய் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பில் வலிகாமம் கிழக்கு பிரிவு அரச மூலிகை தோட்டம் மற்றும் சித்த மத்திய மருந்தகத்தின் அனுசரணையுடன் ஆயுர்வேத பாதுகாப்புசபை இணைந்து நடாத்தும் இலவச பொது மருத்துவ முகாம் இன்றையதினம் (14 /03 /2024) வியாழக்கிழமை வாதரவத்தை கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தேவைப்பாடுடைய நோயாளிகளுக்கு இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு பரிசோதிக்கப்பட்டதுடன், ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட 20க்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு வைத்திய ஆலோசனையும் மருந்துகளும் வழங்கப்பட்டன.
இவ் மருத்துவ முகாமில் 70க்கும் அதிகமான பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றி பயனடைந்தனர்.
இவ் மருத்துவ முகாம் Dr.V.Ganeshavel(Suntharavel Dispensary),
Dr.K.Premaragavan (CMO- Poonakary),
Dr.N.Varani (CMO- Vali east) ஆகியோர் அர்ப்பணிப்பு மிக்க சேவையால் சிறப்பாக அமைய ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.