மத்திய சமூக சேவைகள் திணைக்களமும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தேவையுடையோருக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி 13.03.2024 அன்று வவுனியா young star விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு பி. ஏ. சரத்சந்ர பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் போட்டிகளில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளிற்கு சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.