வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் பிரதேச கலைஞர் ஒன்றுகூடலும் ஆற்றுகை நிகழ்வு நேற்று(13) புதன்கிழமை சிறப்புற நடைபெற்றது.
குறித்த நிகழ்வு பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பூநகரி பிரதேச செயலாளர் த. அகிலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கலைஞர்களின் பல்வேறு கலை படைப்புகள் ஆற்றுகை செய்யப்பட்டன. தொடர்ந்து, கலைஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர், இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிறிஸ்தவ அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர்கள், பூநகரி மற்றும் தீவகம் வடக்கு, ஊர்காவற்றுறை பிரதேச கலைஞர்கள், பண்பாட்டு பேரவையினர் இணைந்து கொண்டிருந்தனர்.