கார் விபத்தில் சிக்கிய லஹிரு திரிமானே

முன்னாள்  இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே பயணித்த கார் இன்று (14) காலை 7.45 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் – திரப்பனே வீதியில் 117 ஆம் இலக்க மைல்கல் அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் பயணித்த கார் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த லஹிரு திரிமானே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *