நல்லாயன் நெய்தல் கலையகத்தில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு!!

வாகரை மாங்கேணி நல்லாயன் நெய்தல் கலையகத்தின் சர்வதேச மகளீர்தின நிகழ்வு நல்லாயன் நெய்தல் கலையக வளாகத்தில் (12) திகதி இடம் பெற்றது.

நல்லாயன் நெய்தல் கலையகத்தின் பணிப்பாளர் அருட் சகோதரி நிர்மலா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.

நல்லாயன் நெய்தல் கலையகத்தினர் கிராம அபிவிருத்தி திட்டத்தினுடாக சிறுவர் நற்புரவு சூழலை அமைப்பதற்கு பெண்களை வலுவூட்டி ஊக்குவிப்பதனுடாக சிறந்த சமூகத்தை அமைப்பதை நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

மேலும் நெய்தல் கலையகத்தினால் இப்பிரதேசத்தில் உள்ள பெண்களை சமூக, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிலும் தமது சேவையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டி யெழுப்புவதற்கு பெண்கள் அயராது பணிபுரிந்து வருகின்றர் என தெரிவித்தார்.

இதன் போது மங்கையர்களினால் கண்கவர் நடனங்கள், நாடகம், பாடல்கள் இசைக்கப்பட்டதுடன் மகளீர் தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றியிட்டியவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்கள், பதக்கங்கள், மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வாகரை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி அர்ச்சனா புவனேந்திரன், வாகரை 233 படைப்பிரிவின் லெட்டினல் கெனல் அனுரகலகிட்டியாவ, திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன், மாங்கேணி ஆலய பங்கு தந்தை ஜெரோம் டலிமா, அருட் சகோதரிகள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் என பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *