கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் சமூக பராமரிப்பு நிலையத்தில் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் அவர்களின் வழிகாட்டலுடன் 11 மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றுமொரு தொகுதி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா, மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.எம். அலியார், பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.நஜீம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எம்.இல்யாஸ் மற்றும் ஏ.அஸ்மியா பானு ஆகியோரின் பங்கேற்புடன் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.