நேற்றைய தினம் (13) மன்னார் மாவட்ட நகர சபை மைதானத்தில் உதவி அரசாங்க அதிபரின் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார். மேலும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பிரதேச செயலாளர்கள் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் பங்கு பற்றிய மாற்றுத் திறனாளிகளுக்கும் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.