காத்தான்குடி பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக்கூட்டம்!!

காத்தான்குடி பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக்குழு கூட்டம் (12) திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், நகரசபை செயலாளர், மாவட்ட காரியாலய காணிப்பயன்பாட்டு உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக காணிப்பயன்பாட்டு உத்தியோகத்தர், நில அளவையர், நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் (167A,167C,165A), கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஹிழுறியா, மில்லத் ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

அண்மையில் இடம்பெற்ற காணிப் பயன்பாட்டுக்குழு கூட்டத்தில் அனுமதி பெற்ற 59 பயனாளிகளில் இயங்கு நிலையில் இல்லாத 7 பயனாளிகளுக்கு பதிலாக புதிய 7 விண்ணப்பதாரர்களுக்கு கடற்கரையை அண்டிய அரச காணியில் வாடி அமைப்பதற்கு குறுகிய கால குத்தகையில் வழங்குவதற்கு பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டது.

மட்/ஹிழுறியா வித்தியாலயத்திற்கு 165A கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஆற்று ஒதுக்குப் பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு 1/2 ஏக்கர் காணியினை நகரசபை பராமரிப்பின் கீழ் அப்பாடசாலை மாணவர்கள் விளையாடுவதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டது.

அத்துடன் மட்/ மில்லத் மகளிர் வித்தியாலயத்திற்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு காணி கோரியதற்கமைவாக 165A பிரிவில் ஹிழுறியா வித்தியாலயத்திற்கு விளையாடுவதற்கு சிபாரிசு செய்யப்பட்ட பகுதியில் மில்லத் மகளிர் வித்தியாலய மாணவர்களுக்கும் வலயக் கல்விப்பணிப்பாளரின் பணிப்புரைக்கமைவாக பயன்படுத்துமாறும் குழுவினால் தீர்மானம் எடுக்கப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *