ஹாலிஎல மெதகம ரில்பொல பகுதியில் வீடு ஒன்றின் கூரையின் மீது பனிக்கட்டி விழுந்துள்ளது. ரில்பொல மொரகல தோட்டத்தில் புதிய பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கூரையின் மீது நேற்று மாலை 5 மணி அளவில் இந்த பனிக்கட்டி விழுந்துள்ளது.
இந்த பனிக்கட்டியின் எடை கிட்டத்தட்ட 50 கிலோவாகும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் உதயகுமார தெரிவித்தார்.
பனிக்கட்டி வீட்டின் கூரையின் மீது விழுந்த சமயம், வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்று இருந்ததாகவும், அவரது வயதான தாயார் மாத்திரமே வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த வீட்டின் அருகாமையில் வசிக்கும் நபர் ஒருவர் இது பற்றி தெரிவிக்கையில், வானத்திலிருந்து பெரிய வெள்ளைப் புறா ஒன்று வீட்டின் கூரையை நோக்கி வருவது போல தெரிந்ததாகவும், அது கூரையின் மீது பெரும் சத்தத்துடன் மோதி விழுவதைப் போல தான் உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இதனால் மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகளும் முறிந்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.