யாழ்ப்பாண மாவட்ட நல்லூர் பிரதேச செயலகத்தில் J/100 கிராம அலுவலர் பிரிவில் நேற்றையதினம் ( 2024.03.12) அஸ்வசுமா நலன்புரி நன்மைகள் செயற்றிட்டத்தின் 02ம் கட்டத்திற்கு விண்ணப்பிப்பது மற்றும் பயனாளிகளின் வலுவூட்டல், சமுர்த்தியின் புதிய எழுச்சி மற்றும் மகளிர் சேமிப்பு வாரம், தனசக்தி முதலீட்டு சேமிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இந் நிகழ்வில் வங்கி முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் CBO உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.