நாடாளவிய ரீதியில் கலாசார எழுச்சியின் ஊடாக அமைதியான வளர்ச்சியடைந்த பூரணமான அழகான இலங்கை மானிட சந்ததியொன்றை உருவாக்கும் நோக்கில் வருடாந்தம் “பன்னிருமாத ஒளி விளக்கு” நிகழ்ச்சித் தொடர் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.
அந்தவகையில், கலாசார மற்றும் கலை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் நேற்று(12) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலளர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில், கலைஞர் சுவதம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்
கலைத்துறைக்கு அரும்பணியாற்றிய, தற்போதும் சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற கலைஞர்களின் வீடுகளுக்குச் சென்று சுகநலம் விசாரித்து அவர்களை கௌரவிக்கும் வேலைத் திட்டத்தின் ஊடாக இரணைமாதாநகர் பகுதியில் மூன்று கலைஞர்களுக்கு தலா 5,000.00 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், கிராமிய நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இரணைமாதாநகர் பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிருமாத நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஜெயபுரம் சிறுவர் கழக சிறுவர்களுக்கான நடனப் பயிற்சி செயலமர்வு நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மாவட்ட ஊடகப் பிரிவு,
மாவட்ட செயலகம்,
கிளிநொச்சி.
See translation