யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆரோக்கியமான வேலைச் சூழலை உருவாக்குதல் செயற்திட்டத்தின் கீழ் மகளிர் தினத்தினை முன்னிட்டு ” பெண்களின் ஆரோக்கியம் ” தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (12) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கருத்தமர்வில் விரிவுரையாளராக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் திரு. Dr.சி.ரகுராமன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
இக் கருத்தமர்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.