தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால் “யாழ்ப்பாண மாவட்ட சகவாழ்வுச் சங்கத்தினை ஸ்தாபித்தல்” தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (12) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பல்வேறு இனத்தவர்களும் தமது சமய மற்றும் கலாசார அடையாளங்களை பாதுகாக்கின்ற அதேவேளை ஏனைய இனத்தவர்கள் மற்றும் இனக்குழுக்களின் இனத்துவ, சமய மற்றும் கலாசார அடையாளங்களை மதிக்கின்ற, மகிழ்ச்சியுடனும், சகவாழ்வுடனும் வாழ்கின்ற மக்கள் எனும் அடையாளத்தை பிரதிபலிக்கும் நோக்கில் மாவட்ட சகவாழ்வுச் சங்கம் நேற்றையதினம் உருவாக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் உதவிப்பணிப்பாளர்களான திரு.சுசந்த குமார மற்றும் திரு.சதுர் லக்மால் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட சகவாழ்வு சங்க தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.