சேவைநலன் பாராட்டு விழா..!!

பதில் திட்டமிடல் பணிப்பாளரும் மணிவிழா நாயகியுமான திருமதி ஜெயபவானி கணேசமூர்த்தி அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பதில் திட்டமிட்டல் பணிப்பாளரக சேவையாற்றி இன்றைய தினத்தில் ஓய்வுபெற்றுச் செல்லும் திருமதி ஜெயபவானி கணேசமூர்த்தி அவர்களின் மணிவிழாவும் சேவைநலன் பாராட்டும் (06) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப.2.00 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

1990 ஆம் ஆண்டு அரச பணியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இணைந்து கொண்ட திருமதி ஜெயபவானி கணேசமூர்த்தி அவர்கள் 34 வருடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பல்துறைகளில் தனது சேவையினை மக்களுக்கு வழங்கினார்.

இவர் திட்ட அமுல்படுத்தல் அலுவலராகவும் திட்ட அமுலாக்கல் உத்தியோகத்தராகவும், செயற்றிட்ட அலுவலகர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட அதிகாரி, DRRS இன் செயற்றிட்ட அதிகாரி, மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் (பதில்) , பல பதவி நிலைகளில் மக்களுக்காக பணிபுரிந்துள்ளார்.

புனர்வாழ்வு , மீள் குடியேற்ற நடவடிக்கை , சொத்தழிவுகளைப் பெற்றுக் கொடுத்தல் , சுனாமி அனர்த்த காலப்பகுதி , உள்நாட்டு யுத்தம், கொரோனாத் தொற்று, பொருளாதார நெருக்கடி, மீள் குடியேற்ற காலப்பகுதி என அனைத்துக் கடினமான சூழ்நிலைகளிலும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் சமூக,பொருளாதார, பௌதீக , வாழ்வியல் சூழலில் பெரு மாற்றத்தினை ஏற்படுத்த பெரும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சேவையினை வழங்கிய திருமதி ஜெயபவானி கணேசமூர்த்தி அவர்களின் சேவைத்தடம் பற்றி திட்டமிடல் கிளையின் உத்தியோகத்தர்களால் உருவாக்கப்பட்ட ” “ஜெயபவனம்” என்ற நூலினை அரசாங்க அதிபர் வெளியிட்டு வைத்தார்.

இன்றைய இந்த நாளில் திருமதி ஜெயபவானி கணேசமூர்த்தி அவர்களின் மக்கள் பணியினை பாராட்டி சிறப்பிக்கும் நிகழ்வில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் வாழ்த்திக் கௌரவித்து நினைவுப் பரிசில்களும் வழங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *