மக்களவை தேர்தலில் கூட்டணி குறித்து பேசி வந்த நிலையில் சமகவை பாஜக உடன் இணைப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக – சமக இடையே தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் சமக தலைவர் சரத்குமார் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைப்பதாக சரத்குமார் தெரிவித்தார்.
பெருந்தலைவர் காமராஜர் போன்று ஆட்சியை மோடி தந்து கொண்டிருக்கிறார். இளைஞர்களின் நலனுக்காக மக்களின் நன்மைக்காக சமகவை இணைத்துள்ளோம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.