கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் இன்று(12) காலை 10.00 மணிக்கு மகளிர் தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு “வன்முறைகளற்ற சுதந்திரமான வாழ்விற்கு பெண்களாக குரல் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில், வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் தலைவி வல்லிபுரம் வாசுகி தலைமையில் நடைபெற்றது.]
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாக முன்றாலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி பசுமை பூங்கா வளாகத்தை சென்றடைந்தது.
தொடர்ந்து, பசுமை பூங்கா வளாகத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டத்தையும் பிரதிநிதத்துவப் படுத்தும் வகையில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மகஜர் உரைகள் நடைபெற்றன.
இந் நிகழ்வில், வடக்கு கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டத்தையும் பிரதிநிதத்துவப் படுத்தும்வகையில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.