இலங்கையில் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்ச் 12 இயக்கம் என்ற பெயரில் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 12 இயக்கத்தின் நிபந்தனைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் ஆதரவைத் திரட்டவும் துண்டுப் பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், தூய அரசியலை வலியுறுத்தும் மார்ச் 12 இயக்கத்தின் “தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்” செயற்றிட்டம் கிளிநொச்சி நகர் பகுதியில் இன்று(12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது தேர்தல் தொடர்பான விழிப்பூட்டல் துண்டுப் பிரசுரங்களும் மக்களிடம் வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடக சந்திப்பும் நடைபெற்றது.
குற்றச்செயலுக்காக தண்டிக்கபட்டவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள், அதனைப் பிறர் பயன்படுத்துவதற்காகத் தூண்டுபவர்கள் போன்றவர்களை வேட்பாளர்களாக நியமிக்கக்கூடாது, பெண்கள், இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத்தக்க வகையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட எட்டு விடயங்களை மார்ச் 12 இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ள அளவு கோல்களாகும்.