கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் கரியாலை நாகபடுவான் பகுதியில் மிளகாய் அறுவடை விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முழங்காவில் விவசாய போதனாசிரியர் ம.மகிலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் S.ஜெகதீஸ்வரி கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நா. புவிதன், முழங்காவில் மறு வயல் பயிர் மற்றும் உற்பத்தியாளர் அமைப்பின் தலைவர் சி.சிறிரங்கநாதன் மற்றும் குறித்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.