கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நடு ஊற்று கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழக்கூடிய மக்களுக்கான உலர் உணவு பொதிகள் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி அவர்களின் தலைமையில் REDCO நிறுவனத்தின் அனுசரணையுடன் நேற்று (11) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் REDCO நிறுவன உத்தியோகத்தர்கள், நடு ஊற்று கிராம உத்தியோகத்தர் பிரிவு பொருளாதாரம் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.