மட்டு மாநகரசபை ஜ.தே.கட்சி முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவரின் வீடு உடைத்து 52 இலச்சம் ரூபா பெறுமதியான 27 ¾ தங்க ஆபரணம், பணம் திருட்டு.
மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் ஜக்கிய தேசிய கட்சி பெண் உறுப்பினர் ஒருவரின் வீடு; உடைத்து 43 இலச்சத்து 7333 ரூபா பெறுமதியான 27 ¾ பவுண் கொண்ட தங்க ஆபரணம் 6 இலச்சம் ரூபா பெறுமதியான புகைபடகருவி, 3 இலச்சத்து 17 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
நகர்பகுதியான அலெக்ஸ்அவனியூர் வீதியில் அமைந்துள்ள குறித்த முன்னாள் மாநகரசபை பெண் உறுப்பினர் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பிள்ளைகளுடன் வீட்டின் அறையில் அவர் உறங்கி கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவதினமான இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு வீட்டின் சமையலறை யன்னல் கிறிலை கழற்றி உள்நுழைந்த திருடன் அறையில் அலுமாரியில் வைத்திருந்த சங்கிலி உட்பட 27 ¾ பவுண்கள் கொண்ட தங்க ஆபரணங்களையும் 3 இலச்சது 17 ஆயிரம் ரூபா பணம், 6 இலச்சம் ரூபா பெறுமதியான புகைபடகருவி என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாகவும் பெண் உறுப்பினர் கண்விழத்த போது திருடனை கண்டுள்ளதாhகவும் ஆனால் அவரால் படுக்;கையில் இருந்து எழும்ப முடியாதவாறு மயக்க நிலை ஏற்பட்டு இருந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எம்.எஸ்.ஜே. றகீம் தலைமையிலான பொலிசார் தடயவியல் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அதேவேளை குறித்த மாநகர சபை உறுப்பினரின் வீடு உடைப்பதற்கு முன்னர் அவரின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒலிவ்லேன் வீதியில் இரு வீடுகளின் யன்னலை உடைத்து திருடர்கள் நுழைந்துள்ளதாகவும் எதுவிதமான பொருட்களை திருடிச் செல்லவில்லை என பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
((கனகராசா சரவணன்)