மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மகளிர் தின விழா நேற்று (10) கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில் மலையக பெருந்தோட்ட பெண்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திரு ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வளர்ச்சிக்காக உழைத்த தோட்டங்களில் உள்ள பெண்கள் , இதில் கலந்துகொண்டனர் .
இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு விவசாயம் மேற் கொள்ள மரக்கறி விதைகள் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் அதிகாரிகள், மகளிர் அமைப்பின் உத்தியோகத்தர்கள், மலையக தோட்ட தொழிலாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.