ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள உயர்பாதுகாப்பு வலய காணிகள் கையளிப்பு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் (10) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
காணிகளுக்கான உரிமங்களை கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோரால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக படையினர்களிடம் இருக்கும் காணிகளில் ஒரு தொகுதி காணிகள் பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலணியின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட கட்டளைத்தபதி மேஜர் ஜனரல் சந்தன விக்கரமசிங்க மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர்கள், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,இராணுவ ,பொலிஸ்,கடற்படை அதிகாரிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள், பொதுமக்கள், உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.