கிண்ணியா பிரதேச மட்ட விளையாட்டு போட்டியானது அண்மையில் கிண்ணியா பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டி கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம் கனி அவர்களின் தலைமையில் நேற்று (10) பைசல் நகர் அல் இர்பான் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், கிண்ணியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கிண்ணியா பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர், பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து விளையாட்டு கழகங்கள், இறுதிப் போட்டிக்கு தெரிவான விளையாட்டு வீரர்கள், வெற்றியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.