மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கத்தினால் மகளீர் தினத்தை முன்னிட்டு “தென்றலில்” எனும் தொனிப்பொருளில் மணப்பெண் அழங்கார கண்காட்சி நிகழ்வு இன்று (10) திகதி இடம் பெற்றது.
மாவட்ட அழகுக்கலை சங்க தலைவி வனிதா செல்லப்பெருமாள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
மாவட்ட செயலக சிறுதொழில் அபிவிருத்தி பிரிவின் பயிற்சி மற்றும் வழிகாட்டலுக்கு அமைய மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அழகுக்கலை சங்கம் மாவட்டத்தில் பெண் சிறுதொழில் முயற்சியாளர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் அழகுக்கலை பயிற்சிகளை வழங்கி வருகின்றது.
பயிற்றுவிக்கப்பட்ட அழகுக்கலை பயிற்சியாளர்களின் அழகுக்கலையினை காட்சிப்படுத்தும் மணப்பெண் அழங்கார கண்காட்சி நிகழ்வு இன்று கோலாகலமாக இடம் பெற்றுள்ளது.
மகளீர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சாதனை பெண்களாக அழகு கலை பயிற்சியை நிறைவு செய்த பெண்களை அதிதிகள் கௌரவித்து விருதுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் அழகுகலை நிபுணர் பற்றிக் குயின்டா, துறைசார் நிபுணர்கள், அழகுகலை பயிற்றுவிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அழகுக்கலை சங்கத்தினால் மாவட்டத்தில் பல சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.