மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி!!
மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் திருமதி தவத்திருமகள் உதயக்குமார் தலைமையில் வெபர் விளையாட்டு மைதானத்தில் (07) திகதி இடம் பெற்றது.
பாடசாலை மாணவிகளின் பாண்டு வாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைத்து மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
இதன் போது பிரதம அதிதிகளுக்கு மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கும் இல்லங்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் 793 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினை சம்ப்னஸ் இல்லமும், 702 புள்ளிகளை பெற்று
இரண்டாம் இடத்தினை வின்சன்ட் இல்லமும், 607 புள்ளிகளை பெற்று
மூன்றாம் இடத்தினை குரோப்ட் இல்லமும் 576 புள்ளிகளை பெற்று
நான்காவது இடத்தை பற்மன் இல்லமும் பெற்றுக்கொண்டுள்ளது.
இந் நிகழ்வின் விசேட அதிதியாக 243 இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சன்டிம குமாரசிங்க, கெளரவ அதிதியாக பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.ரவிராஜா கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவகத்தின் உடற்கல்வி போதனாசிரியை திருமதி மிருணாளினி அரவிந்தன், பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் சங்க செயலாளர் திருமதி தர்ஷினி சுந்தரேசன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் முரளி மற்றும் பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.