கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு பாடசாலையின் அதிபர் என். ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஐ.டி.எம் நேசன் கம்பஸ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்,கௌரவ அதிதியாக அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் வண பிதா சந்ரு பெர்னாண்டோ கலந்து கொண்டிருந்தார்.
அதேவேளை மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கை நடாத்துவதற்கான அன்பளிப்பொன்றும் கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகனால் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி ஜனகன் ,பாடசாலை கட்டட சுவர்ப்பூச்சிற்கான நிதியை நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வின் போது கலாநிதி விநாயக மூர்த்தி ஜனகனுக்கு நினைவுச்சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.