சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, ஜியோ இந்தியா அறக்கட்டளை சார்பில் 15 பெண்களுக்கு, 2024 ஆம் ஆண்டிற்கான WOW WONDER WOMAN விருதுகள் வழங்கப்பட்டன.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, ஜியோ இந்தியா அறக்கட்டளை சார்பில் 15 பெண்களுக்கு, 2024 ஆம் ஆண்டிற்கான WOW Wonder Woman விருதுகள் வழங்கப்பட்டன
ஜியோ இந்தியா அறக்கட்டளை சென்னை சிட்டி சென்டரில் 2024ஆம் ஆண்டிற்கான WOW Wonder Woman விருது விழாவை நடத்தி சர்வதேச மகளிர் தின விழாவை கொண்டாடியது.
இந்நிகழ்ச்சியில் ஆரண்யா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி ஷில்பம் கபூர் ரத்தோர், ஃபேஷன் இயக்குனர் திரு. கருண் ராமன், ஒய்எம்சிஏ மெட்ராஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.ஆசீர் பாண்டியன் மற்றும் நடிகை இனியா நிறுவனர் அனோரா ஆர்ட் ஸ்டூடியோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
டாக்டர்.சுதா, ஜே.ரேகா பிரியதர்ஷினி, காயத்ரி சங்கர், திருமதி அனிதா ஸ்ரீநாத், திருமதி. சுகந்தா வேல் முருகன் , திருமதி கல்யாணந்தி சச்சிதானந்தன், திருமதி புவனா ராஜ், டாக்டர் சிவ உமையாள் பிரேமாவதி, செல்வி பொற்கொடி பழனியப்பன், டாக்டர் ராஜமீனாட்சி, திருமதி தேவிகலா மற்றும் திருமதி டி.ஆர். விஜயலட்சுமி- நெக்ஸஸ் பிஆர் ஆகிய 15 பேருக்கு சிறந்த பெண் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், ஜியோ இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் பிரியா ஜெமிமா, பழங்குடியின பெண்களின் மேம்பாட்டுக்காக ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சவுத் வழங்கிய 10 உணவுக்கடை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் ஸ்பாட் லைட் மூலம் 10 தையல் இயந்திரங்களை வழங்கினார்.
விருது பெற்ற அனைவரும் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாகவும், கிராமப்புற பெண்களின் ஆற்றலைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் நிகழ்ச்சியின் அமைப்பாளரான ஜியோ இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் பிரியா ஜெமிமா தெரிவித்தார்.