சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை மொயின் அலி புகழ்ந்துள்ளார்.
ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை கிங்ஸ் – பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்காக சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான், லக்னோ ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில்,சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை மொயின் அலி புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
தோனி ஒரு சிறப்பான வீரர் மட்டுமின்றி சிற்ப்பான கேப்டன் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மிகவும் நல்லவர். சிஎஸ்கே கேப்டனாக தோனி இருந்து அந்த அணிக்காக நீங்கள் விளையாடும்போது. அணி பலமானதோ அல்லது பலவீனமானதோ ஆனால், அந்த அணி வெல்தற்காக வாய்ப்பு உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.