சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு களனி பிரதேச சபை வளாகத்தில் அதற்கான விசேட நிகழ்வுகைளை நடாத்துவதற்கு, சுதேச வைத்திய துறை அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம் மற்றும் களனி பிரதேச சபை ஆகியன இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.
சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜெயக்கொடியின் தலைமையில் இடம்பெறும் இச்சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று (08) காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இலவசமாக இடம்பெறும் இந்நிகழ்வில் ஆயுர்வேத, மேற்கத்திய மருத்துவ முகாம் மற்றும் அழகுக்கலை பயிற்சிப்பட்டறை, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளன.
இதன்போது, ஆயுர்வேத மற்றும் மேற்கத்திய மருத்துவ வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை வழங்கல், இரத்த அழுத்தம், நீரிழிவு, உட்பட ஆய்வுகூட பரிசோதனைகள், ஈ.சி.ஜி, சிறுநீரக பரிசோதனை, ஆயுர்வேத பாதுகாப்பு ஊடாக மேற்கொள்ளப்படும் பாரம்பரிய வைத்தியம், ஹோமியோபதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத ஆய்வின் ஊடாக நடைபெறும் அழகுக்கலை செயலமர்வு, உள்நாட்டு உணவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எச். பி. வக்கும்புற வினால் நடாத்தப்படும் பெண்நோய் தொடர்பான விரிவுரை என்பன இடம்பெற உள்ளதுடன், ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகளுக்கு விசேட சலுகையுடன் கொள்வனவு செய்வதற்கான வசதிகளும் வழங்கப்பட உள்ளன.