மட்டக்களப்பில் சர்வதேச பெண்கள் தினத்தையிட்டு ‘நமது வீட்டையும் சமூகத்தையும் செழிப்பாக வைத்திருக்கும் பெண்களை சர்வதேச பெண்கள் தினத்தில் வாழ்துத்துவோம்’ எனும் தொனிப் பொருளில் காந்தி பூங்காவில் இருந்து கல்லடிப்பாலம் வரையிலான கவனயீர்பு ஊர்வலம் ஒன்று இன்று புதன்கிழமை (6) இடம்பெற்றது
சூரியா பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் இன்று காலை காந்தி பூங்காவிற்கு முன்னால் ஒன்று கூடிய நுன்கடன் இரத்து செய்ய வேண்டும், கடன் இல்லாத வாழ்வாதாரம் வேண்டும், பெண்களின் உழைப்பை சுரண்டாதே, உணவு பாதுகாப்பை உறுதி செய், நெருக்கடியான நிலையில் எக்காரணத்தைக் கொண்டும் சாதாரண மக்களின் ஜனநாயக ரீதியான அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை சட்டத்தின் மூலம் அதனை அடிக்கி ஒடுக்குவதை உடன் நிறுத்து.
போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு இயற்கை விவசாய உணவு வேண்டும் என் வேசம் அணிந்து பறையடித்து காந்தி பூங்காலில் முன்னாள் இருந்து ஊர்வலமாக ஆரம்பித்து அரசடி பகுதிக்கு சென்று அங்கிருந்து கல்லடி பாலம் வரை சென்றனர்.
இதனை தொடர்ந்து பல்வேறு பட்ட விழிப்புணர்வு தெருநாடகங்கள் அரங்கேற்றப்பட்டது.
(கனகராசா சரவணன்)