என்னை அணியை விட்டு நீக்க பேச்சுவார்த்தை நடந்தது… அஸ்வின்!

சமீபத்தில் இந்திய அணியின் சுழல்பந்து ஜாம்பவான் அஸ்வின் தனது 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 8 ஆவது பவுலராகவும், இந்திய அளவில் இரண்டாவது பவுலராகவும் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

இதையடுத்த தரம்சாலாவில் நடக்க உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டி அவருக்கு 100 ஆவது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது. இந்த சாதனையைப் படைக்கும் முதல் தமிழக வீரராக அஸ்வின் உருவாகியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் தன்னுடைய பயணம் குறித்து பேசியுள்ள அஸ்வின் “2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான தொடர் மிக மோசமாக அமைந்தது. அந்த தொடரில் நான் 14 விக்கெட்களை மட்டுமே 52 ரன்கள் சராசரியாக கொடுத்திருந்தேன். அப்போது என்னை அணியை விட்டு நீக்கக் கூட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதன் பிறகு நான் என்னுடைய தவறு என்ன என்பதைக் கண்டுபிடித்து அதை சரிசெய்தேன்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *