மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பெக்டேட் நேற்று (04) மீன்பிடித் துறை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இக்கலந்துரையாடலில் மீன்பிடித்துறை அமைச்சினால் மேற்கொள்வதற்கு எதிர்பாார்க்கப்படும் புதிய மீன்பிடிச் சட்டமூலம் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் அது, எமது மீன்பிடி சமூகம் சர்வதேச மட்டத்திற்குத் தரமுயர்த்துவதற்காக சர்வதேச சட்டவிதிகளுக்கு இணங்க தயாரிக்கப்படுவதாக அமைச்சர் இதன் போது தெளிவுபடுத்தினார்.
பிரதான மீன்பிடித் துறைமுகங்கள் பலவற்றை அபிவிருத்தி செயல்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது ட்ரான்ஸ்லட் தூதுவருடன் கலந்துரையாடப்பட்டதுடன் விசேடமாக அமைச்சர் எமது மீன்பிடி சமூகத்தை வலுப்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய உதவிகளை முடிந்தவரை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதன் போது மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் நயனாகுமாரி சோமரத்ன, மீன்பிடித்துறை பணிப்பாளர் நாயகம் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.