நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.
குறித்த போட்டியில் நுவரெலியா உதைபந்தாட்ட சங்க தலைவரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ரா. கேதீஸ் , செயலாளர் சாந்தன் பொருளாளர் லாபர் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் இவ் சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.