குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

லிந்துலை தங்க கலை தோட்டத்தில் இன்று காலை 9 மணி அளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியதால் ஏழு பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெண்கள் 5, ஆண்கள் இருவர் மொத்தமாக ஏழு பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிருபர்: கௌஷல்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *