ஸ்ருதிஹாசன் குரலில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் பாடல்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.

சிவா, பிரியா ஆனந்த் நடித்த ‘வணக்கம் சென்னை’ படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’, ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப்தொடர் ஆகியவற்றை இயக்கினார்.

கிருத்திகா உதயநிதி அடுத்து இயக்கும் படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளனர். யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘காதலிக்க நேரமில்லை’ என பெயர் வைத்துள்ளனர். தமிழில் இதற்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு இதே தலைப்பில் படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் பதிவு குறித்த அப்டேட்டை கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ளார். படத்தின் முதல் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். சிநேகன் பாடலை எழுதியுள்ளார். “முதல் பாடல் பதிவு மகிழ்ச்சியாக நடந்தது” என கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *