பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து திருகோணமலையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சாதனை !

தமிழ் நாடு தனுஸ்கோடியிலிருந்து இன்று (01)  அதிகாலை நீந்த ஆரம்பித்து  தலைமன்னார் வரை நீந்திக் கடந்துள்ளார்.

சிறுவனை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதுவர் தலைமன்னாருக்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர் சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை 8 மணித்தியாலம் 15 நிமிடங்களில் நீந்திக் கடந்துள்ளார்.

குறித்த மாணவன் திருகோணமலை மாவட்டத்தில் கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *