பசறை நகரில் உள்ள டீஷல் மற்றும் பெற்றோல் முச்சக்கர வண்டிகள் இன்றைய தினம் பசறை பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பசறை பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வேலைத்திட்டம் பதுளை மோட்டார் வாகன திணைக்களத்தினரின் உதவியுடன் பசறை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
முச்சக்கர வண்டிகளை கவர்ச்சியேற்படுவதற்காக மேலதிகமாக பொறுத்தப்பட்டுள்ள உபகரணங்களை அகற்றுமாறும் மேலும் வாகனங்களில் உள்ள குறை நிறைகளும் அவதானிக்கப்பட்டன. குறை நிறைகளை சீர் செய்து காட்டுவதற்காக சுமார் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M.பியரத்ன ஏக்கநாயக்க தலைமையிலான போக்குவரத்து பொலிஸ் பிரிவினரும் மற்றும் பதுளை மோட்டார் வாகன திணைக்களத்தின் பரிசோதகர்களான இந்திக கருணாரத்ன, அசித ரந்தெனிய மற்றும் புகை பரிசோதனை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.