தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று (29) நடைபெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கட்சியுடன் நாங்கள் இன்று கலந்துரையாடல் ஒன்றை நடந்தினோம். நாட்டை பற்றியும் பொருளாதாரத்தையும் பற்றியும் கலந்துரையாடினோம். சம்பிக்க ரணவக்க நாட்டிற்கு தேவைப்படும் ஒரு தலைவர். அவரது கட்சி புதிய கட்சியாக இருந்தாலும் அவர் வரலாறு படைத்த பழைய தலைவர்.
அதிகாரத்தை பற்றி பிறகு பேசுங்கள் முதலில் தேர்தலை நடத்துங்கள். நிர்வாக அதிகாரமுடைய ஜனாதிபதியை அகற்ற வேண்டும் என்ற கருத்து காணப்படுகிறது. அதனால் முதலில் தேர்தலை நடத்துங்கள் என தெரிவித்தார்.