ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் (28) கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தார்.
இதன்போது, தௌபீக் எம்.பியின் கோரிக்கைக்கமைவாக அவசர திருத்தவேலைக்காக கல்வி அமைச்சினால் ஓதுக்கிடு செய்யப்பட்ட மூன்று மில்லியன் ரூபாய்க்கான திருத்தப்பணிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், பாடசாலையின் தேவைகளை பாரளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்ததுடன் விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்ததார்.
இக்கலந்துரையாடலில், அதிபர் நஜாத், பிரதி அதிபர் கியாஸ், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஹம்சாத் மற்றும் அசிரியர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.