கடந்த 2015 ஆம் ஆண்டும் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘ஆம்பள’. இப்படத்தில் சைடு ரோலில் நடித்திருந்தார் நடிகை கிரண் ரத்தோட். இந்நிலையில் இப்படத்தில் நடித்தது நான் செஞ்ச மிகப்பெரிய தவறு என நேர்காணல் ஒன்றில் கிரண் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருகிறார் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகி ரிலீசுக்காக காத்திருக்கிறது. இதனையடுத்து தற்போது ‘கலகலப்பு 3’ படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் ‘ஆம்பள’ படத்தில் நடித்தது தவறு என பேட்டி ஒன்றில் நடிகை கிரண் ரத்தோட் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘ஜெமினி’ படத்தின் வாயிலான நடிகையாக அறிமுனர் ஆனவர் கிரண். இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் கோலிவுட்டில் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை இவர் அடைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அஜித் ஜோடியாக ‘வில்லன்’, கமலின் ‘அன்பே சிவம்’, பிரசாந்தின் ‘வின்னர்’ என இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டடித்தன.
அதன்பிறகு படங்கள் எதிலும் நடிக்காமல் காணாமல் போய்விட்டார் கிரண். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தும் கிரணை பல படங்களில் பார்க்க முடியவில்லை. ஒருக்கட்டத்தில் சினிமாவில் இருந்தே காணாமல் போய்விட்டார். இதனையடுத்து விஜய்யின் ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடினார்.
சகுனி, ஆம்பள ஆகிய படங்களில் சைடு ரோல்களில் நடித்தார். இந்நிலையில் ‘ஆம்பள’ படத்தில் நடித்தது குறித்து கிரண் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆம்பள’. விஷால், ஹன்சிகா மோத்வானி, பிரபு, ரம்யா கிருஷ்ணன், சந்தானம், வைபவ், ஐஸ்வர்யா பாஸ்கரன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் கிரணும் சைடு ரோலில் நடித்திருந்தார்.
‘ஆம்பள’ படத்தில் நடித்தது குறித்து ஷகீலா உடனான நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள நடிகை கிரண், சுந்தர் சி எனது குடும்பத்தில் ஒருவர் போல. உங்கள் படத்தில் நடிக்க வேண்டுமேன நான்தான் அவரிடம் வாய்ப்பு கேட்டேன். அப்படித்தான் ஆம்பள படத்தில் நான் நடித்தேன். ஆனால் அப்படத்தில் ஒரு செட் ப்ராப்பர்ட்டி போல் தான் நான் இருந்தேன். அதில் நடித்தது என்னுடைய தவறு தான். இவ்வாறு பேசியுள்ளார் கிரண்.