லிந்துலை மெலகுசேனை தோட்டத்தில் மரக்கறி தோட்டத்திற்கு போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலனிஈகல்ஸ் (மெலகுசேனை)தோட்டத்தில் மரக்கறி தோட்டத்திற்கு போடப்பட்டிருந்த மின்சார வேளியில் அகப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (28) காலை இடம் பெற்றுள்ளது.
55 வயதுடைய மருதவீரன் நாகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.