பாணின் நிறை தொடர்பாக இலங்கை பூராகவும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி நகர் பகுதியில் உள்ள வெதுப்பகங்கள் பல கிளிநொச்சி மாவட்ட அளவீட்டு அலகுகள் திணைக்களத்தினால் இன்று(27) சோதனையிடப்பட்டன.
பாணின் நிகர எடை தொடர்பில் குறித்த விசேட சோதனை நடவடிக்கைகளை மாவட்ட அளவீட்டு அலகுகள் திணைக்களத்தினர் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, பல வெதுப்பகங்களில் 450g ற்கும் குறைவான நிறையில் பாணினை தயாரித்து செய்து விற்பனை செய்யப்பட்டுவந்தமை கண்டறியப்பட்டதுடன் குறித்த வெதுப்பக உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
குறிப்பாக 450g நிகர நிறையைவிட குறைவாக பாண் உற்பத்திசெய்வது மட்டுமல்ல, அவற்றை விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.