காசாவில் இஸ்ரேல் படையினரால் பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் மற்றும் மக்கள் கொல்லப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் (FMETU) ஏற்பாட்டில் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்மேளனத்தின் செயலாளர் திரு தர்மசிறி லங்காபேலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு தம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வு நேற்றைய தினம் (26) கொழும்பு ரெயின்போ இன்ஸ்டிடியூட் (Rainbow Institute) இல் நடைபெற்றது.