ரூ.3 கோடி மதிப்பிலான தங்க கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஊர்வசி ரவுடேலா.. தங்க கேக்குடன் நடிகை இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்..
2015 ஆம் ஆண்டு மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா.
தனது 15 வயது முதல் மாடலிங் துறையில் அசத்தி வரும் ஊர்வசி ரவுடேலா 2009 ஆம் ஆண்டு மிஸ் டீன் இந்தியா பட்டத்தை தட்டி சென்றவர்.
மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற பிறகு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தது. இந்தி மட்டுமல்லாமல் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் ஊர்வசி ரவுடேலா நடித்துள்ளார்.
பாலிவுட் ராப்பர் யோ யோ ஹனி சிங்கின் சர்வதேச வீடியோ ஆல்பமான லவ் டோஸில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் ஊர்வசி ரவுடேலா.
2022 ஆம் ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் அதிபரான லெஜன்ட் அருள் சரவணன் ஹீரோவாக நடித்த ‘தி லெஜெண்ட்’ படத்தின் நாயகியாக இவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், லவ் டோஸ் 2 செட்டில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட 3 கோடி மதிப்பிலான தங்க கேக்கை வெட்டி தனது 29 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகை ஊர்வசி ரவுடேலா.
ஊர்வசி ரவுடேலாவுக்கு இந்த 3 கோடி தங்க கேக்கை பரிசாக அளித்துள்ளார் யோ யோ ஹனிசிங். இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..