நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட முள்ளுகாமம் கீழ் பிரிவில், நேற்று இரவு வீடொன்றில் ஏற்பட்ட தீ பரவலில், அந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் இந்த வீட்டின் உரிமையாளர் தனது வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்டு, கொழும்பு சென்று உள்ளதாகவும் அந்த வீட்டில் குடியிருக்கும் நபர் சிவனடி பாத மலை அடிவாரத்தில் வியாபாரம் செய்யச் சென்றிருந்த வேளையில் மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியுள்ளது என கூறினார்.
தீ பரவியதால் ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்கள் சேகரிப்பதாகவும் தீ பரவலினால் உயிர் சேதங்கள் இல்லை என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்