லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து லிந்துலை நகருக்கு சென்று நாகசேனை ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், பிரதேச மக்களின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் 2.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையை சேர்ந்த 14 வயதுடைய என்.ஜீ டிலிப்ப கமகே என்ற மாணவனே உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.